• Apr 07 2026

கார் டாஸ்க்கில் எல்லை மீறிய மோதல்… பார்வதி – கம்ருதீனுக்கு கடும் வார்னிங் கொடுத்த பிரஜன்

shali / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது 90 நாட்களை நெருங்கி, மிகப் பெரிய திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் வீட்டுக்குள் நுழைந்த பல போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி வெளியேறிய நிலையில், தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடையே வெற்றி பெறும் போட்டி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த சீசனில் இதுவரை பல சர்ச்சைகள், நட்பு முறிவுகள், கடும் வாக்குவாதங்கள் ஆகியவை ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளன. தற்போது பிக்பாஸ் வீட்டில், விஜே பார்வதி, கம்ருதீன், விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், திவ்யா கணேஷ், சாண்ட்ரா, சுபிக்‌ஷா, சபரி, அரோரா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கிடையே Ticket To Finale டாஸ்க் தொடங்கியதிலிருந்து போட்டி மேலும் கடுமையாகியுள்ளது.

Ticket To Finale டாஸ்க்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற கார் டாஸ்க், இந்த வாரத்தின் மிகப் பெரிய சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது. இந்த டாஸ்க்கின் போது, போட்டியில் முன்னிலை பெறுவதற்காக போட்டியாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர்.


அப்போது, விஜே பார்வதி கார் மீது அமர்ந்திருந்த சாண்ட்ராவை எட்டி உதைத்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு இணையாக, கம்ருதீனும் சப்போர்ட் செய்தது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை உருவாக்கியது. 

இந்த சர்ச்சைக்கு பிறகு, சாண்ட்ராவின் கணவரும், பிக்பாஸ் 9 இன் முன்னாள் போட்டியாளருமான பிரஜன் தனது ஆவேசத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அவரது கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜன் அதன்போது,“நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறேன். அப்படி நான் உள்ளே போகும் போது கம்ருதீன் வீட்டில் இருந்தால், அது அவருக்கு கெட்ட நேரம். இல்லாவிட்டால் நல்ல நேரம். இது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.” என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement