• Dec 26 2024

’பிரேமலு’ நாயகிக்கு என்ன ஆச்சு? லவ்வில் சிக்கிவிட்டாரா? கூட இருந்தே குழி பறித்த நண்பன்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான ’பிரேமலு’ என்ற மலையாள படம் தென்னிந்திய முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் குறிப்பாக தமிழில் டப் செய்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் பாரத்தோம். 

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க ஜாலியாகவும் ரொமான்ஸ் ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ’பிரேமலு’ படத்தின் சக்சஸ் மீட் நடந்த நிலையில் இதில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பங்கு கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படம் வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டில் ’பிரேமலு’ படத்தில் ரீனு கேரக்டரில் நடித்த நாயகி மமிதா பாஜு மற்றும் அமல் கேரக்டரில் சங்கீத் பிரதாப்  ஆகிய இருவரும் ரகசியமாக  ரொமான்ஸ் உடன் பேசிக் கொண்டனர். ரீனு, அமல் உடன் சிரித்து சிரித்து பேசியதோடு, அவருடைய கன்னத்தில் செல்லமாக அடித்ததை  பார்க்கும்போது இருவருக்கும் லவ் ஏற்பட்டு விட்டதா என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். 

’பிரேமலு’ படத்தின் கதையின்படி நாயகன் சச்சினை தான் ரீனு லவ் செய்வதாக இருக்கும் நிலையில் தற்போது நாயகனின் நண்பனை ரீனு காதலிப்பதாக வெளியாகி இருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நண்பனுக்கு அமல் குழி தோண்டி விட்டாரா? சச்சினை அம்போவென கைவிட்டுவிட்டு ரீனு, அமலை திருமணம் செய்ய போகிறாரா என்று கற்பனையில் பல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement