சூர்யா — ஆர்ஜே பாலாஜி இணைந்து முதல் முறையாக உருவாக்கிய கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சூர்யா நாயகனாகவும் திரிஷா நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையிலேயே இசை விழாவை படக்குழு நடத்தியுள்ளது.
கடந்த 2025 மே 1ஆம் தேதி வெளியான ரெட்ரோ படம் சூர்யாவுக்கு சிறந்த கம்பேக் கொடுத்தது.. அதேபோல கருப்பு படமும் அதை விட அதிகமான வசூலை குவிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

கருப்பு பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, இந்தப் படம் தனக்கும் சூர்யாவுக்கும் மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்ததாக தெரிவித்தார். .
இந்த நிலையில், திரிஷா பற்றியும் அவர் கூறுகையில், திரிஷா இன்று எங்கள் குழுவுடன் இணைய முடியவில்லை, இருப்பினும், அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல.
கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது சற்றும் எளிதான காரியமல்ல. அண்மைக் காலத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே, இதுவும் மிகச் சிறந்த ஒன்றாக அமையும் என கருப்பு இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி பேசியிருந்தார்.
Listen News!