• Jan 06 2025

வடிவேல் பாணியில் போஸ் கொடுக்கும் ப்ரியா பவானி சங்கர் ,புகைப்படம் உள்ளே !!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் வெளியான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி நாடகத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான  ப்ரியா பவானி சங்கர்  இன்று  தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி தனக்கென தனி ரசிகர் படையை கொண்ட ஒரு நடிகையாக திகழ்கிறார்.இவர்  தனது திரைப்பட வாழ்க்கையை வணிக ரீதியாக வெற்றி பெற்ற தமிழ் திரைப்படமான 2017 இல் வெளியான மேயாத மான் மூலம் தொடங்கினார். 


தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்,மாஃபியா: அத்தியாயம் 1,யானை திருச்சிற்றம்பலம் ,மற்றும் பத்து தலை போன்ற வெற்றிகரமான படங்களில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.அத்துடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.


இந்நிலையில் சுற்றுலா சென்றுள்ள ப்ரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவதுடன் அவர்களை சிரிக்கவும் வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படமொன்றில் வடிவேல் பாணியில் கராத்தே போஸ் கொடுத்திருக்கிறார்.

Advertisement

Advertisement