சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஜொலித்து வருகின்றார். இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். எனினும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. இறுதியில் விவகாரத்தில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா மகாலட்சுமி சினிமாவில் கவனம் செலுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து பிரபலம் ஆனார்.

இந்த நிலையில், நடிகை ரச்சிதா மகாலட்சுமியில் ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய வீட்டில் உள்ள மினி பார் செட்டப்பை முதன்முறையாக காட்டி இருக்கிறார்.
மேலும், தனது தந்தையின் நினைவாக வீட்டில் சிறப்பு பார் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது தந்தை வீடு கட்டினால் மது வைக்கும் தனி இடம் இருக்க வேண்டும் என விரும்பியதாகவும், அதனை நினைவுகூர்ந்து இந்த அமைப்பை செய்ததாகவும் கூறினார்.
மேலும், பல்வேறு வெளிநாட்டு வைன்களை சேகரித்து வைத்திருப்பதாகவும், குறிப்பாக “சுலா” பிராண்ட் வைன் தமக்கு மிகவும் பிடித்தது எனவும் தெரிவித்தார்.
Listen News!