• Dec 27 2024

பாக்கியாவை வார்த்தையால் கொன்ற ராதிகா! இனியாவுக்கு விழுந்த கும்மாங்குத்து

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா செழியனிடம் பாக்கியாவுக்கு போன் பண்ணி அழைக்குமாறு அவர் வந்தால் தான் இனியாவை விடுவேன் என்றும் விடாப்பிடியாக நிற்கின்றார்.

இதனால்  செழியனும் வேறு வழி இன்றி பாக்கியாவுக்கு போன் பண்ணி ராதிகாவிடம் கொடுக்கின்றார். அவர் இனியா பப்பில் குடித்துவிட்டு கலாட்டா பண்ணியதாகவும், தான் போலீசிலிருந்து காப்பாற்றியதாகவும் இப்போ நீங்க இந்த இடத்துக்கு வந்தா தான் இனியாவை விடுவேன் என்றும் சொல்லுகின்றார்.

இதனால் பாக்கியா பதறி அடித்துக் கொண்டு செல்வியிடம் எல்லாவற்றையும் பார்க்குமாறு சொல்லிவிட்டு ஈஸ்வரியுடன் கிளம்பி வருகின்றார். அங்கு வந்த பாக்கியாவிடம் உங்க பொண்ணு என்ன செய்தா  தெரியுமா? இன்னும் 21 வயசு கூட ஆகல பப்ல பசங்க கூட குடிச்சு கலாட்டா பண்ணி இருக்கா நான் வரல என்றா  போலீசுக்கு போய் இருப்பா. நாளைக்கு நியூஸ் பேப்பரில் வந்திருக்கும் என்று கண்டபடி பேசுகின்றார்.


ஆனா நீங்க என் பொண்ண என்ன செய்திங்க. எனக்கு தெரியாமல் கோர்ட்டுக்கு கூட்டி வந்தீங்க இதுதான் உங்களுக்கும் எனக்கும் இருக்கிற வித்தியாசம் என தக்க சமயத்தில் பதிலடி கொடுக்கிறார். அங்கிருந்த ஈஸ்வரியும் இனியாவுக்கு பேசுகின்றார். காரில் போனதும் அடிக்கவும் செய்கிறார்.

இறுதியாக பாக்கியா  ராதிகாவுக்கு நன்றி சொல்ல, அவர் ஒன்றுமே பேசாமல் போகின்றார். செல்வி அங்கிருந்து கொண்டு போன் பண்ண, உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணு எனக்கு அங்க வர முடியாது என்று சொல்லுகின்றார். இதனால் செல்வி தன்னால் முடிந்தவற்றை பண்ணுகின்றார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.

Advertisement

Advertisement