சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வேட்டையன் மற்றும் கூலி திரைப்படம் தயாராகி வருகின்றது. கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதோடு இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படம் மே தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் எனவும் தகவல்கள் கசிந்து இருந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இருந்தது.
d_i_a
ஜெயிலர் படத்தில் இரண்டாவது பாகத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருந்தது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தல பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கல்வி கற்ற பள்ளியின் ஆண்டு விழாவில் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். தற்போது அவருடைய வீடியோ வைரலாகி வருகின்றது.
அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளியில் படித்தபோது அங்கு ஏற்பாடு செய்திருந்த சாண்டாலா என்ற நாடகத்தில் முதல்முறையாக நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் தான் தனது உயர்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்றும், கன்னட மொழி பள்ளியில் இருந்து ஆங்கில மொழி பள்ளிக்கு மாறியபோது தனது படிப்பில் ஏற்பட்ட சிரமங்களையும் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த காணொளியில் ரஜினி கன்னட மொழியில் பேசியுள்ளதால் ரஜினியின் தமிழ் ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Superstar Rajinikanth talks in Kannada about his school days #chitraloka #rajinikanth #SuperstarRajinikanth #kannada #schooldays pic.twitter.com/tkhwnDKNWy
Listen News!