• Dec 26 2024

கள்ளச்சாராய மரணம்.. 3 நாட்களுக்கு பின் விழித்த ராமராஜன்.. ஆனாலும் காரசாரமான அறிக்கை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மரணம் நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகி உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்த நிலையில் மூன்று நாட்கள் கழித்து பொறுமையாக நடிகர் ராமராஜன் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் தாமதமாக வெளியிட்டாலும் அவரது அறிக்கையில் காரசாரமான கருத்துக்கள் உள்ளன. ராமராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இது தான்:

50 மரணங்கள் என்பது ஒரு சின்ன கிராமத்தில் நினைத்துப் பார்க்க இயலவே இல்லை. கிராமங்களில் ஒரு மரணம் என்றாலே அத்தனை வீடும் சோறு பொங்காது. சாப்பிடாது. அத்தனை பங்கெடுக்கும். இங்கு 50 வீடுகள் அதன் சொந்த பந்தங்கள் எப்படி துயர் கொண்டிருப்பவர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்னால்.

கொரோனா கொத்து கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல் இந்த கள்ளச்சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது. இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால் இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டி செல்கிறது.

மனிதர்களை குடி எப்படி கொல்கிறது என்பது நிகழ்கால பாடமாக நிகழ்ந்திருக்கிறது. குடிகளுக்கு ஏன் குடி? அவசியமற்ற ஒன்றை மகிழ்ச்சி என்ற பெயரில் மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது என்ற குடும்பங்களின் நல்லுறவை சிதைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டியது மது கலாச்சாரமா? போதைப் பொருள் கலாச்சாரமா? தெரியவில்லை. அவர்கள் நன்றாக ஆரோக்கியத்துடன் குடும்பங்களை உருவாக்க வேண்டியவர்கள் என்பதை எப்போது உணர்ந்து கொள்ள வைக்க போகிறோம்?

ஒரு படத்தின் ஆரம்பத்தில் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதோடு நம் சமூக அக்கறை முடிந்து போகிறதா? குடியால் நாம் இறந்தவர்கள் அதிகம்.

Advertisement

Advertisement