தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைத்தளங்களில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருமணத்திற்கு பிறகும் ராஷ்மிகா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ அந்த எதிர்பார்ப்பை மாற்றியிருக்கிறது. அந்த பதிவில் “நாங்கள் மூன்று பேர்” என்று குறிப்பிட்டிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த ஒரு வரி தான் தற்போது பல ஊகங்களுக்கு காரணமாகியுள்ளது. பல ரசிகர்கள், “ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கிறாரா?” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும், சிலர் திருமணமான குறுகிய காலத்திலேயே இந்த மகிழ்ச்சி செய்தியை அவர் மறைமுகமாக பகிர்ந்திருக்கலாம் என்று கூறி வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்து ராஷ்மிகா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பில் எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. எனவே, இது வெறும் ரசிகர்கள் ஊகம் மட்டுமா அல்லது உண்மையா என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Listen News!