தமிழ் திரையுலகில் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கும் நடிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர் ரவி மோகன். இவர் தனது தனிப்பட்ட தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டுடியோஸினைத் தொடங்கி, திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, அவர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தயாரித்து நடித்து வரும் ‘புரோ கோட்’ படத்திற்கு எதிராக தற்போது பெரும் எதிர்ப்பு உருவாகி வருகிறது.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலம் நடிகர் ரவி மோகன் திரையுலகில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் பணியாற்றி வருகிறார். அவரது முதல் படைப்புகளில் ஒன்று ‘புரோ கோட்’ ஆகும். இந்த படத்தின் கதாநாயகராகவும், தயாரிப்பாளராகவும் ரவி மோகன் செயல்படுகிறார்.

இந்நிலையில், ‘புரோ கோட்’ தலைப்புக்கு எதிராக, இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. நிறுவனம் மதுபானத்திற்கு 'புரோ கோட்’ என்ற பெயரைப் பயன்படுத்தி வருவதால், திரைப்பட தலைப்பும் அதே பெயரில் இருந்தால் வணிகச் சிக்கல் ஏற்படும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தினர்.
இதன் காரணமாக, டெல்லி உயர்நீதிமன்றம் திரைப்பட தலைப்புகள், வணிகச்சின்ன உரிமைகளை மீறக்கூடாது என இடைக்கால தடை உத்தரவிட்டது.
வழக்கின் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் தற்பொழுது நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.
Listen News!