• Apr 07 2026

ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்யுங்கள்.! கார்த்திக் சுப்புராஜ் எமோஷனல் பதிவு

Aathira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராக கார்த்திக் சுப்புராஜ் திகழ்ந்து வருகிறார். தற்போது அவருடைய இயக்கத்தில் வெளியான படம் தான் நீளிரா. இந்த படம் இலங்கை யுத்த களத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

1988-ஆம் ஆண்டு இலங்கை வடக்கு பகுதியை பின்னணியாகக் கொண்டு, போர்ச் சூழலில் சிக்கிய ஒரு குடும்பத்தின் கதையை பேசுகிறது. ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் மூலம் போரின் வலி மற்றும் சாதாரண மக்களின் மனஅழுத்தத்தை படம் நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. 

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில், அவர் வெளியிட்ட பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள நீளிரா திரைப்படத்தை மையமாகக் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படம் பல சவால்களை கடந்து உருவாகியதாகவும், அதில் உள்ள நம்பிக்கை ஒருபோதும் குறையவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும், இது வெறும் ஒரு படம் அல்ல, நல்ல சினிமாவுக்கான ஒரு புதிய தொடக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நல்ல படங்கள் உருவாகினாலும் அவற்றுக்கு தியேட்டர்களில் கிடைக்க வேண்டிய ஆதரவு குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது என கூறியுள்ளார். “படம் நல்லா இருக்கு” என்று சொல்லுவது மட்டும் போதாது, மக்கள் நேரடியாக தியேட்டருக்கு சென்று பார்த்தால்தான் அந்த படங்களுக்கு உயிர் கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன், இந்த படத்தின் OTT வெளியீட்டை காத்திருக்காமல் தியேட்டரில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement