தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜய், தற்போது தனது முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தி வருகின்றார். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்தார். தற்போது முழுநேரமாக அரசியலில் களமிறங்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில் சங்கீதா விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் அளித்த மனுவில் தனது கணவருக்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி, விஜய்யும் நடிகை திரிஷாவும் குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்தன. அதே நேரத்தில், விஜய் மற்றும் திரிஷா ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும், ஒரே நிற ஆடையில் தோன்றியதும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு பக்கம், இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் “சிக்மா” என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால், அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், விஜய் தனது மகன் ஜேசன் சஞ்சய்க்கு தேவையான உதவிகளை செய்யவில்லை. தந்தையாக தோற்றுவிட்டார் என்று அவரது முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் விமர்சித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், விஜயின் மகன் என்றாலும், சஞ்சய் கடந்த நான்கு ஆண்டுகளாக படத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். இதுவரை அவரை அழைத்து ‘என்ன பிரச்சனை, என்ன உதவி வேண்டும்’ என்று விஜய் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் கேட்கவில்லை. அன்று எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் தானாக வளரட்டும் என்று இருந்திருந்தால், இன்று விஜய் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது என அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
Listen News!