• Dec 26 2024

ஈஸ்வரி எடுத்த முடிவால் ஜெனி வீட்டுக்கு ஓடிப் போன செழியன்- கதறி அழும் பாக்கியா, அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் ராதிகா- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜெனி வீட்டிற்கு சென்ற பாக்கியா குடும்பத்தை ஜெனியின் அப்பா அவமானப்படுத்தி பேசிக் கொண்டே இருக்கின்றார். ஜெனி இனிமேல் இங்க தான் இருப்பா, உங்க வீட்டுக்கு வாழ அனுப்பி வைக்க முடியாது என்று கண்டபாட்டுக்கு திட்ட, பதிலுக்கு ஈஸ்வரியும் நீங்க பண்ணுறதை பண்ணுங்க பார்த்துக்கலாம் என்று திட்டி விட்டு போகின்றார்.


தொடர்ந்து ஜெனி எதற்காக எனக்குத் தெரியாம டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினீங்க என்று தன்னுடைய அப்பாவிடம் கேட்க, அவர் நீ அங்க இருந்து கஷ்டப்பட்டதெல்லாம் போதும்,இனியாவது நாங்க சொல்வதைக் கேளு என்று திட்ட அந்த நேரம் பார்த்து செழியன் போன் எடுக்க அவருடைய அப்பா போனை வாங்கி கட் பண்ணி விட்டு வைக்கின்றார்.

அத்தோடு செழியனுடன் இனிமேல் கதைக்கவே கூடாது என்று ஆடர் போட ஜெனி என்ன செய்வதென்று குழப்பத்தில் இருக்கின்றார்.மறுபுறம் எல்லோரும் வீட்டுக்கு வந்ததும் செழியன் ஜெனி வீட்டில என்ன நடந்தது என்று கேட்க, ஈஸ்வரி ஜெனி ஒரு வார்த்தை கூட பேசல அவங்க அப்பா ரொம்ப தப்பா பேசிறாரு,


அவங்க என்ன டிவோர்ஸ் கொடுக்கிறது நாங்களே கொடுத்திட வேண்டியது தான் என்று சொல்ல, செழியன் அதிர்ச்சியடைவதோடு தான் இப்பவே ஜெனியைப் பார்த்து ஆக வேண்டும் என்று ஜெனி வீட்டுக்கு கிளம்பிப்போக எழிலும் செழியனுக்கு பின்னாடி போகின்றார். வீட்டில் நடப்பதைப் பார்த்து பாக்கியா ஒரு புறம் இருந்து அழுகின்றார்.


இதனால் அமிர்தா சமாதானப்படுத்துகின்றார். அதே போல மறுபுறம் ஈஸ்வரி அழ ராதிகா எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார். தொடர்ந்து கணேஷ் பாக்கியாவுக்கு போன் பண்ண அமிர்தா யார் என்று கேட்க பாக்கியா கதையை மாற்றி விட்டு போனை எப்படி எடுத்து பேசுவது என்று யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement