• Dec 27 2024

டைம் கிடைச்சா இந்த படத்தை பாருங்க.. ‘சிறகடிக்க ஆசை’ நடிகர் வெளியிட்ட வீடியோ.!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்சிறகடிக்க ஆசைஎன்ற சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும், டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை இடத்தை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அண்ணாமலை - விஜயா,  முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி மற்றும் ரவி - ஸ்ருதி ஆகிய எட்டு முக்கிய கேரக்டர்கள் இந்த சீரியலில் இடம் பெற்றுள்ளது என்பதும், அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை நகர்த்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஹீரோ முத்துவின் நண்பராக பழனியப்பன் என்பவர் செல்வம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார் என்பதும் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கடந்த சில நாட்களுக்கு முன், தான் மலையாள படமானமஞ்சம்மல் பாய்ஸ்என்ற திரைப்படத்தை பார்த்ததாகவும் அந்த படம் மிகப்பெரிய அளவில் தனக்கு பிடித்ததாகவும் கூறியுள்ளார்.



ஒரு மலையாள படத்திற்கு தமிழ் படத்தை விட அதிக கூட்டம் வந்ததை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் இந்த படத்தை டைம் இருந்தால் எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்றும் கண்டிப்பாக திருப்தியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்தகுணாபடத்தில் உள்ள குணா குகை தான் இந்த படத்தின் முக்கிய கதையம்சமாக இருக்கிறது என்பதும்குணாபடத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும் சரியான இடத்தில் இந்த படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியான ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்பதும் அதேபோல் தமிழகத்தில் இந்த படம் டப்பிங் செய்யாமல் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் செல்வம் கேரக்டரில் நடித்து வரும் பழனியப்பன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தை அனைவரும் பாருங்கள் என்று வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement