• Dec 27 2024

‘சிறகடிக்க ஆசை’ சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்.. டாப் 5 விவரங்கள்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் கடந்த நான்கு வாரங்களாக முதலிடத்தில் இருந்த நிலையில் சன் டிவி சீரியல் மீண்டும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது முதல் ஐந்து இடத்திற்கான தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிங்க பெண்ணே’ சீரியல் 9.11 புள்ளிகள் பெற்று ரேட்டிங்கில் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் விஜய் டிவியின் ’சிறகடிக்க ஆசை’ 8.86 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக முதலிடத்தில் இருந்த ’சிறகடிக்க ஆசை’ பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பது அந்த சீரியல் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவது இடத்தில் ’கயல்’ சீரியல் 8.76 புள்ளிகள் பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் நாம் மருமகள் 8.25 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் 7.65 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மணி நேரத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள சீரியல் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement