• Apr 27 2026

’சிறகடிக்க ஆசை’ மனோஜ்க்கு கிடைத்த திரைப்பட வாய்ப்பு.. ஜோடி இந்த பிரபல நடிகையா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீ தேவாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் பிரபலமாகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான படங்களில் நடித்து இயக்கிய ஆர் சுந்தர்ராஜன் கூட ’சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் தான் எனக்கு பட்டிதொட்டி எங்கும் புகழ் கிடைத்தது என்று சமீபத்தில் அளித்ஹ்ட பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவா மிகவும் சிறப்பாக நடித்து வருவதாக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது அவருக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஸ்ரீதேவா ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஸ்ரீ தேவாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement