• Dec 26 2024

முத்து வாங்கி கொடுத்த பைக்கை கண்டுக்கவில்லையா..? வேறொருவனுடன் குத்தாட்டம் போடும் மீனா..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

மீனாவுக்காக முத்து கஷ்டப்பட்டு பைக் வாங்கி கொடுத்து இருக்கும் நிலையில் மீனா வேறொருவருடன் டப்பாங்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விஜய் டிவியில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டும் வகையில் காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரமோ வீடியோவில் மீனாவின் பூக்கடையை கார்ப்பரேஷன் அதிகாரிகள் அள்ளிக்கொண்டு செல்ல, அப்போது வருத்தத்தில் இருக்கும் மீனாவுக்கு முத்து புது பைக் வாங்கி தருகிறார். இனிமேல் இந்த பைக் தான் உனக்கு பூக்கடை, நீ எங்கு வேண்டுமானாலும் சென்று பூ விற்கலாம் என்று அவர் கூற மீனா மகிழ்ச்சி அடைகிறார். 

இந்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் மீனா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’சிறகடிக்க ஆசை’ மலையாள சீரியலின் ஹீரோவுடன் குத்தாட்டம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. மீனா நீங்க செம ஸ்வீட்டாக இருக்கீங்க என்றும். முத்து அங்க உங்களுக்கு பைக் வாங்கி கொடுக்கிறான். நீங்க இங்க இவரோட டான்ஸ் ஆடுறீங்களா. என்றும் பலவிதமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.




Advertisement

Advertisement