• Dec 26 2024

சிவகார்த்திகேயனுடன் போட்டி போட்டு தோல்வி அடைந்த தனுஷ்.. என்ன நடந்தது?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் இடையே ஒரு பெரும்  போட்டி நடந்த நிலையில் அந்த போட்டியில் தனுஷை, சிவகார்த்திகேயன் வீழ்த்தி விட்டதாக கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த ’புறநானூறு’ என்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விலகியதாக செய்திகள் வெளியானது. இதை அடுத்து சூர்யாவுக்கு பதில் அந்த படத்தில் நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரிடமும் இயக்குனர் சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது.



இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் எப்படியாவது தான் நடிக்க வேண்டும் என்று தனுஷ் மிகவும் ஆவலுடன் காத்திருந்ததாகவும் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பியதாகவும் கூறப்பட்ட நிலையில் தனது தொழில் எதிரி சிவகார்த்திகேயனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் தனுஷ் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிக்க இருந்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதை அடுத்து ’புறநானூறு’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement