• Jul 23 2025

ஓநாய் மட்டும் கரெக்டா ஸ்கெட்ச் போட்டா சிங்கத்தையே வீழ்த்திடும்... ’ராயன்’ டிரைலர்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷின் 50வது திரைப்படமான ’ராயன்’ என்ற படத்தை அவரே இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளம்பர பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த ட்ரெய்லரின் ஆரம்பக் காட்சி மிரட்டும் வகையில் உள்ளது. தனுஷை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் காட்சியுடன் ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லரில் ’காட்டில் இருக்கும் மிருகங்களில் ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என்று செல்வராகவன் கேள்வி கேட்கிறார். அப்போது ஒருவர் ’சிங்கம்’ என்று கூற ’சிங்கம் புலி எல்லாம் வலிமையான மிருகம், ஆனால் ஆபத்தான மிருகம் ஓநாய் தான்’ என்றும் ’சிங்கத்துடன் ஒத்தைக்கு ஒத்தை போட்டி போட்டால் ஓநாயை சிங்கம் வீழ்த்தி விடும், ஆனால் ஓநாய் ஸ்கெட்ச் போட்டால் சிங்கத்தையே வீழ்த்தி விடும் என்று கூறுகிறார்.



இதனை அடுத்து எஸ்ஜே சூர்யா ஆவேசமாக ’அவன் ஆம்பள தான, முடிந்தால் என்னை இங்கு வந்து போடச்சொல்’ என்று கூற அதற்கு செல்வராகவன், ’போடுவான் கண்டிப்பாக வருவான்’ என்று கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

தனுஷின் ஆக்ரோஷமான நடிப்பு, சூர்யாவின் வில்லத்தனம், ஏஆர் ரஹ்மானின் மிரட்டலான பின்னணி ஆகியவை இந்த ட்ரைலர் வீடியோவில் இருப்பதை பார்க்கும் போது இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement