• Dec 26 2024

பெரிய அளவில் கனவு காணுங்கள்.. விஜய் இடத்தை பிடிப்பது தான் சிவகார்த்திகேயன் நோக்கமா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

 நேற்று சிவகார்த்திகேயன் நடித்த ’எஸ்கே 21’ படத்தின் புரமோஷன் வீடியோ வெளியான நிலையில் அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், பெரிய அளவில் கனவு காணுங்கள் என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து  விஜய் இடத்தை அவர் பிடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில்  அவர் அனேகமாக இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு திரையுலகிலிருந்து வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விஜய்யின் இடம் காலியாக இருக்கும் நிலையில் அந்த இடத்தை பிடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித்துக்கு இணையாக அதே நேரத்தில் விஜய் போல் மாஸ் நடிகராக, குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகராக மாற வேண்டும் என்றால் அதற்கு சிவகார்த்திகேயன் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக திரை உலகினர் கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயனும் அந்த இடத்தை நோக்கி தான் வளர்ந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.



இந்த நிலையில் நேற்று வெளியான ’எஸ்கே 21’ படத்தின் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் அதில் ’பெரிய அளவில் கனவு காணுங்கள், பாசிட்டிவாக இருங்கள், கடுமையான உழையுங்கள் மற்றும் உங்கள் பயணத்தை என்ஜாய் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரே தனக்குத்தானே கூறிக் கொண்டது போலவும் விஜய் இட த்தை பிடிப்பதற்காக அவர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement