• Dec 26 2024

டி.இமான் விவகாரத்தால் புறக்கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயன்- இவருக்கு இப்படியொரு பிரச்சினையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் டி. இமான். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் “இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணையமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அந்த துரோகத்தை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதை வெளியில் சொல்லவில்லை” என்றார்.

இது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவருக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு சிவாதான் காரணமாக இருப்பார் என்று ஒருதரப்பினர் கூறினர்.ஆனால் சிவகார்த்திகேயன் எந்தத் தவறும் செய்யவில்லை என அவரது முதல் மனைவியான மோனிகா தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தப் படம் பிரச்சினையில் இருந்தது. 


ஏலியனை மையமாக வைத்து படம் உருவாகியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுப்பதற்காக தற்போது சிவகார்த்திகேயன் பலரிடம் முயற்சி செய்கிறாராம். அந்தவகையில் முதலில் சந்தானத்திடம் கேட்டதாகவும் ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றும்; அதேபோல் வடிவேலுவிடம் கேட்டதற்கு அவரும் பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. 


யாருமே இப்படி ஒத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு சிவகார்த்திகேயன் இமேஜ் இப்போது உடைந்திருப்பதுதான் காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement