• Apr 18 2026

எப்போதும் நல்லா இருங்க, ஆனால் எதுவும் தீர விசாரிப்பதே மெய்- கமல் பிறந்தநாளில் பிரதீப் தெரிவித்த ஸ்பெஷல் வாழ்த்து

stella / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட்டாபிக்காக சென்றுகொண்டு இருப்பது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் எவிக்ஷன்.கமல் பிரதீப்பை எவிக்ஷன் செய்தது தவறு என்று நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே அர்ச்சனாவும் பிரதீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார். இதனால் அர்ச்சனாவுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் மாயா தலைவராக இருந்து கொண்டு ஸ்மோஸ் ஹவுஸிற்குள் இருப்போரை கொடு


இதனால் இந்த வாரம் சனி,ஞாயிறு எப்பிஷோட் எப்பிடி இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.அத்தோடு யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க கமல்ஹாசன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இதற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகரும் தமது வாழ்ததுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதீப்பும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேர். எப்போதும் நல்லா இருங்க, ஆனால் எதுவும் தீர விசாரிப்பதே மெய் எனப் பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement