• Apr 26 2026

மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு படத்திற்கு சோலிமுடிஞ்சு..! ரிசப் ஷெட்டி படத்திற்கு பார்ட் 3 கன்ஃபார்ம்? விரைவில் ரிலீஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா,தெலுங்கு சினிமா, ஹிந்தி சினிமா, மலையாள சினிமா  போன்றவை பல திரைப்படங்கள் மூலம் மாஸ் காட்டி வந்தன.

சினிமா என்றாலே இவை தான்பா என்று கெத்து காட்டிய நிலையில், இது தாண்ட கன்னட சினிமா என்று KGF 2 படத்தின் மூலம் பிரபல்யமானது கன்னட சினிமா.

KGF ஐ தொடர்ந்து இவங்களுக்கு ஆக்சன் படம் மட்டும் தான்பா சரி வரும் என்ற விமர்சனங்களுக்கு இடையில், கடந்த 2022 செப்டம்பர் 30 அன்று வெளியாகிய திரைப்படம் தான் காந்தாரா.


இத்திரைப்படம் ரிசப் ஷெட்டி நடிப்பில் 14 கோடி ரூபா செலவில் எடுக்கப்பட்டு இருந்தாலும், உலகம் பூராகவும் சுமார் 320 கோடி வசூலை செய்து இந்திய சினிமாவை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வைத்தது.

இதை தொடர்ந்து இத்திரைப்படத்துக்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழுவினர் 1ஸ்ட்  லுக் போஸ்ட்டருடன் அண்மையில் அறிவித்தது .


அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்த  நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது அதன் இரண்டாம்  பாகம் மற்றும் மூன்றாம் பாகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி சில  மாதங்களிலேயே அடுத்த பாகமும் வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் தற்போது அறிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement