• Dec 28 2024

'இந்தியன் 2' படத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி..! நாளைய தினம் சும்மா வெடிக்கப்போகுது!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த் போன்ற பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் அன்று சிறப்புக் காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனால் ரசிகர்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்பட்டு அது உயிருக்கு ஆபத்தாக முடிவதால் கடந்த மூன்று வருடங்களாக தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றது.

அதிலும் குறிப்பாக ஐந்து மணி ஆறு மணிக்கு ஆரம்பிக்கப்படும் சிறப்பு காட்சிகளுக்கு தடை விரித்த தமிழக அரசு, 9:00 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்து வருகின்றது.


இந்த நிலையில் நாளைய தினம் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சார்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட்டுக்கொள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

இதனால் நாளைய தினம் தியேட்டர்களின் வாசலில் பட்டாசு வெடிக்கப்பட்டும் என்பது உறுதி.

Advertisement

Advertisement