• Dec 26 2024

நன்றி மறந்தாரா சூர்யா? 2 இயக்குனர்கள் மனதை நோகடித்த விஷயம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவுக்கு திரையுலகில் திருப்புமுனை இரண்டு இயக்குனர்களின் மனதை அவர் நோகடித்ததாக அவர் மீது கோலிவுட் திரை உலகினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நடிகர் சூர்யா ஒரு கட்டத்தில் வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு படங்கள் ’சூரரைப் போற்று’ மற்றும் ’ஜெய் பீம் ’ஆகிய படங்கள். ’சூரரைப் போற்று' படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்த நிலையில் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த இரண்டு இயக்குனர் மனதை தான் சூர்யா நோகடித்ததாக கூறப்படுகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த ’புறநானூறு’ என்ற படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட சூர்யா, அதன்பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதை அடுத்து சுதா கொங்கரா மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ஜெய் பீம்’ இயக்குனரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தை அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் சூர்யா தனது ’கங்குவா’ படத்தை ரிலீஸ் செய்வது இயக்குனருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.



வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு சுதா கோங்கரா மற்றும் ஞானவேல் ஆகிய இருவரும் தான் வெற்றி படங்களை கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தினர் என்பதும் ஆனால் அந்த நன்றி இல்லாமல் அவர் சுதா கொங்கரா படத்தில் நடிக்க முடியாது என்று கூறியதோடு ஞானவேல் படத்தின் அடுத்த படத்திற்கு போட்டியாக தனது படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளதை தான் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது,

ஆனால் அதே நேரத்தில் ஒரு படத்தை வெளியிடும் தேதியை முடிவு செய்வது தயாரிப்பாளர் தான் என்றும் இதற்கும் சூர்யாவுக்கும் சம்பந்தமில்லை என்றும் சூர்யா எப்போதுமே சுதா கொங்கரா மற்றும் ஞானவேல் ஆகிய இருவர் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் என்றும் அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement