• Dec 26 2024

ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுதா கொங்கரா.. என்ன காரணம்?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது சாவர்க்கர் குறித்து ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார்.  சாவர்க்கர் ஒரு பெரிய தலைவர், அனைவராலும் மதிக்கப்படுபவர், அவர் தனது மனைவியை படிக்க வைத்தார், அந்த காலத்தில் பெண்கள் படிக்க மாட்டார்கள், அப்படியே படிக்க போனாலும் தெருவில் உள்ளவர்கள் அசிங்கமாக பேசுவார்கள். அதனால் படிக்க மாட்டேன் என்று சொல்ல, அப்போது சாவர்க்கர் தனது மனைவி கையை பிடித்துக் கொண்டு அவரே பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றார்’ என்று பேட்டி அளித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து சாவர்க்கர் குறித்து தவறான தகவலை சுதா கொங்கரா சொல்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனத்திற்கு பிறகு தற்போது அவர் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்று செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான்.

எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்.

சுதா கொங்கராவின் இந்த மன்னிப்பு பதிவுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும், ஒருசில நெகட்டிவ் கமெண்ட்களும் பதிவாகி வருகிறது.





Advertisement

Advertisement