• Dec 27 2024

நானே சுட்டு படம் எடுக்கிறேன்.. என் படத்தை சுட்டிருக்காரே.. அட்லி, தனுஷ் குறித்து புளு சட்டை மாறன்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் உள்ள சில காட்சிகள் அட்லி இயக்கத்தில் உருவான ’மெர்சல்’ படத்தின் காட்சிகளின் காப்பி என்று சமூக வலைதளத்தில் சிலர் பதிவு செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் ராயன் கேரக்டரின் சில காட்சிகள் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'மெர்சல்’ படத்தின் ராயப்பன் காட்சிகள் போல் உள்ளது என்று சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விமர்சனத்தை கேலியாக பதிவு செய்துள்ள புளு சட்டை மாறன் ’நானே சுட்டு படம் எடுக்குறேன், என்கிட்டயே சுட்டு படம் எடுத்துட்டியே’ என்று மீம்ஸ் ஒன்றை பதிவு செய்து ’சுட்டவன் கிட்டயே சுட்றது’ என்றும் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவுக்கு ‘அட்லி இதை கம்ப்ளைன்ட் பண்ணவும் முடியாது, ‘என்றும், ‘திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி இருக்கும்’ என்றும், ‘ராயன்’ படத்தின் கதையை சுட்டு ஒரு புதிய திரைப்படம் அட்லி பண்ணாமல் இருந்தால் சரி’ என்பது போன்ற காமெடி கமெண்ட் பதிவாகி வருகின்றன

Advertisement

Advertisement