• Dec 26 2024

சன் டிவியில் ஞாயிறு மட்டும் ஒரு புதிய சீரியல்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சில சீரியல்கள் முடிந்தும் இன்னும் சில சீரியல்கள் முடிய போகும் நிலையில் இருப்பதால் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட புதிய சீரியல்கள் ஆரம்பிக்க உள்ளதாக வெளியான செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஞாயிறு மட்டும் அல்லது சனி, ஞாயிறு மட்டும் ஒளிபரப்பாகும் வகையில் ஒரு புதிய சீரியல் ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் பார்வையாளர்கள் பலர் இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்றும் கூறி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ’ராமாயணம்’ என்ற இதிகாச சீரியல் ஒளிபரப்பானது என்பதும் இந்த சீரியல் ஏராளமான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. அந்த வகையில் ஞாயிறு மட்டும் அல்லது சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் ராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒளிபரப்பான ’ராமாயணம்’  சீரியலின் மறுஒளிபரப்பு இல்லை என்றும் இது  புதிதாக இந்தியில் ஒளிபரப்பான ’ராமாயணம்’ சீரியலின் டப்பிங் தான் என்றும் கூறப்படுகிறது.



அதேபோல் ’பிரியமான தோழி’ சீரியல் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சி எபிசோடு 1 மணி நேரம்  ஒளிபரப்பாக இருப்பதாகவும் அத்துடன் அந்த சீரியல் முடியும் என்றும் கூறப்படுகிறது. ‘பிரியமான தோழி’ முடிவடைந்த உடன் ’புன்னகை பூவே’ என்ற சீரியல் ஆரம்பமாக உள்ளது என்றும் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் மதியம் ஒரு மணிக்கு இந்த சீரியல் ஆரம்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் ’கல்யாண கலாட்டா’ என்ற சீரியல் தான் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்ட நிலையில் அந்த சீரியல் கொஞ்சம் தாமதம் ஆகி வருவதால் ’பிரியமான தோழி’ ஒரு மணிக்கு ஒளிபரப்பாக சன் டிவி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement