• Dec 27 2024

டாப் குக்கு டூப் குக்கு தயாரிப்பாளரே வெங்கடேஷ் பட் தானா? கோடியை நெருங்கிவிட்டதா வருமானம்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில் அன்றைய தினமே வெங்கடேஷ் பட், சன் டிவியில் நாளை எங்களது நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என்று தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருந்த அவர், குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனுக்கு வரவில்லை என்று கூறிவிட்டு சன் டிவிக்கு சென்றது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மிஷன் மற்றும் இயக்குநர் பார்த்திபன் ஆகியோர் வெளியேறியதை அடுத்து பிளான் பண்ணி தான் மூவரும் வெளியேறியிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சன் டிவியில் ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக முன்னோட்ட வீடியோ வெளியானதில் இருந்தே அதில் வெங்கடேஷ் பட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை மட்டும் இன்றி வேறு சில கோமாளிகளையும் அழைத்து சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. குறிப்பாக குக் வித் கோமாளி இன்னும் மூலம் பிரபலமான ஜி பி முத்து, பரத், மோனிஷா, தீபா உள்ளிட்டோரையும் அழைத்துச் சென்றுள்ளார் என்பது முன்னோட்ட வீடியோவில் இருந்து தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது ‘VB DACE’ என்ற நிறுவனம் என்று கூறப்பட்ட நிலையில் ‘VB’என்றால் வெங்கடேஷ் பட் என்றும் இந்த நிறுவனம் வெங்கடேஷ் பட் அவர்களின் நிறுவனம் தான் என்றும் எனவே இந்த நிகழ்ச்சியை தயாரிப்பதும் வெங்கடேஷ் பட் தான் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை பல எபிசோடுகளாக குறைந்தது மூன்று மாதங்கள் ஒளிபரப்பாகும் என்றும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைக்கும் வருமானம் கோடியை நெருங்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மீடியா மிஷன் நிர்வாகிகள் ’டாப் குக்கு டுப் குக்கு’ நிகழ்ச்சியை தயாரிப்பது நாங்கள்தான் என்றும் முதல் முதலாக நாங்கள் சன் டிவியுடன் கைகோர்த்துள்ளோம் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இருக்கும் என்று யாரும் எண்ண வேண்டாம் இது வித்தியாசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது வெங்கடேஷ் பட் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement

Advertisement