• Dec 27 2024

சன் டிவியில் ’லட்சுமி’ சீரியல் ஆரம்பம்.. ’மீனா’ ‘அருவி’ சீரியல்களின் நேரம் மாற்றம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும்லட்சுமிஎன்ற சீரியல் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் மற்றும்ஆபீஸ்உட்பட பல சீரியல்களில் நடித்த ஸ்ருதி ராஜ் ஆகிய  இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் வரும் திங்கள் முதல் அதாவது மார்ச் 18 ஆம் தேதி முதல்லட்சுமிசீரியல் தொடங்க இருக்கும் நிலையில் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

லட்சுமிசீரியல் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதை அடுத்து ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 2 சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல்லட்சுமிசீரியல் ஆரம்பிக்க இருப்பதால் அன்று முதல்மீனாசீரியல் காலை 11 மணிக்கும், ’அருவிசீரியல் 12 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது

இந்த நிலையில்திருமதி செல்வம்சீரியலுக்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்துலட்சுமிதொடரில் சீரியலில் நடிகை ரிந்தியா என்பவர் இணைந்து உள்ளார் என்பதும் அவரது கேரக்டருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சீவ் ஸ்ருதி ராஜ், ரிந்தியா உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மனதில் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Advertisement

Advertisement