• Jan 16 2025

சுந்தர்.சி - அனுராக் கூட்டணியில் உருவான திரில்லர் படம்.. சற்றுமுன் வெளியான 'ஒன் 2 ஒன்' டிரெய்லர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சுந்தர்.சி நடிப்பில் இயக்குனர் கே திருஞானம் இயக்கியுள்ள 'ஒன் 2 ஒன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

'ஒன் 2 ஒன்'  திரைப்படத்தை 24 ஹவர்ஸ் ப்ரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதோடு, இந்த படத்தில் சுந்தர்.சியுடன் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள், சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் போன்ற படங்களுக்கு பிறகு தற்போது சுந்தர்.சி நடிப்பில் தயாராகும் 'ஒன் 2 ஒன்' படத்திலும் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.


இந்த படத்தில் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன், நடிகை நீது சந்திரா ஆகியோர் முக்கிய கேரக்டர்களிலும் ராகினி திவேதி, பேபி மானஸ்தி, ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், 'ஒன் 2 ஒன்'  படத்தின் டிரைலர் படக்குழுவினரால் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த படமும் விரைவில் திரையரங்குக்கு வெளியாக உள்ளது. 

இதேவேளை குறித்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படத்திலும் அனுராக் தனது நடிப்பில் மிரட்டி இருப்பார் என்றும், சுந்தர். சி எமோஷனலான ஒரு கேரக்டரில் நடித்து இருப்பது போலவும் தெரிகிறது. இதோ படத்தின் ட்ரெய்லர்,


Advertisement

Advertisement