• Jun 15 2026

தன் தலையை அடமானம் வைத்து கருடனை பெற்றெடுத்த சூரி... தற்போது வெளியான தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விடுதலை படத்திற்கு பிறகு அசுர நாயகனாக அவதாரம் எடுத்த நடிகர் சூரி பற்றி தற்போது பல பல தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. சூரி நடிப்பில் இறுதியாக வெளியான கருடன் படம் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், பிரபல சேனல்கள் போட்டி போட்டு சூரியை பேட்டி எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், சூரி நாயகனாக நடித்த கருடன் படத்திற்காக கடன் பத்திரம் ஒன்றில் கையெழுத்து போட்டு படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்துள்ளராம்.

அதாவது, கருடன் படத்துக்காக 20 கோடிகள் கடனாக வாங்கி இருக்கிறார்கள். அது வட்டியோடு சேர்த்து 24 கோடியாகிவிட்டது. கடைசியில் ஒரு 7 கோடிகள் துண்டுவிழுந்துள்ளது.


இவ்வாறான நிலையில் கருடன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை எனக் கூறப்பட்ட போது, தன் தலையை அடமானம் வைத்தது போல சூரி கையெழுத்து போட்டு அந்த 7 கோடிக்காக கையெழுத்து போட்டு படத்தை ரிலீஸ் செய்துள்ளராம்.

இவ்வாறு தனது நடிப்பின் மேல் நம்பிக்கை வைத்து சூரி செய்த இந்த காரியத்தால், தற்போது கருடன் படம் பல கோடிகளை வாரிக் குவித்து வருகின்றது.

தற்போது நட்பு, துரோகம், பழிவாங்கல், விசுவாசம், என கருடன் படத்தில் சூரியின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.


 

Advertisement

Advertisement