• Dec 24 2024

பாலாவின் வெற்றிவிழாவில் கண்டிஷனோடு கலந்து கொண்ட சூர்யா! விக்ரம் செய்த காரியம்?

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

1999 ஆம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் பாலா. இந்தப் படம் விக்ரமுக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இதில் சீயான் என்ற கேரக்டரில் விக்ரம் நடித்தபடியால் தான் அவருக்கு சீயான் விக்ரம் என்ற பெயரும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பிதாமகன் படத்தையும் விக்ரமை வைத்து இயக்கினார் பாலா. இந்தப் படமும் விக்ரமின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் விக்ரமுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு பாலாவும் விக்ரமும் இணைந்து பணியாற்றவே இல்லை.

எனினும் விக்ரம் தனது மகன் ஹீரோவாக அறிமுகமாகும் போது பாலா தான் அந்த படத்தை இயக்க வேண்டும் என்று ஒற்றைக்  காலில் நின்றார். அதற்கு சம்மதித்த பாலாவும் வர்மா என்ற படத்தை துருவ் விக்ரமை வைத்து எடுத்தார். ஆனாலும் அந்தப் படம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை என்று அந்த படத்தை ட்ராப் செய்தனர்.

d_i_a

மேலும் வர்மா படம் எடுக்கும் போது ஒரு முறை கூட விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தது இல்லையாம். அந்த அளவுக்கு பாலா மீது நம்பிக்கை வைத்துள்ளார். ஆனால் வர்மா படத்தின் ப்ரிவியூ பார்க்கும்போது பாதியிலேயே எழுந்து கிளம்பி சென்று விட்டார். 


இதனால் விக்ரமுக்கு போன் போட்ட பாலா, பாதியிலேயே எழுந்து சென்று என்னை அசிங்கப்படுத்துறியா என சண்டை போட்டதாகவும் அதற்குப் பின்னரே இருவரும் பேசிக் கொள்வதில்லை எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், பாலாவின் 25 ஆவது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது விக்ரம் கலந்து கொள்ளாதது பலருக்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தற்போது இது தொடர்பில் வலைப்பேச்சு அந்தணன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், பாலாவின் 25 வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது விக்ரம் கலந்து கொள்ளவில்லை அவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்பட்டது. அவர் உண்மையாகவே வெளிநாட்டில் இருந்தாரா? இல்லை இந்த விழா பற்றி தெரிந்துதான் விக்ரம் வெளிநாட்டுக்கு சென்றாரோ தெரியவில்லை.


வணங்கான் படத்தையும் பாலாவின் 25ஆவது வெற்றி விழாவையும் ஒன்றாக இணைத்து தான் கொண்டாடி உள்ளார்கள். இந்த விழாவில்  சூர்யாவும் விக்ரமும் கலந்து கொள்வார்களா? என்பது தான் பலரது கேள்வி.

இதில் பெரிய ஆச்சரியம் சூர்யா கலந்து கொண்டது தான். பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் மனக்கசப்புகள் ஏற்பட்ட போதும் அவர் பாலா மீது மரியாதை வைத்து கலந்து கொண்டுள்ளார்.

அதிலும் சூர்யாவுக்கு 9 மணிக்கு பிளைட் இருக்கு. தன்னை 7.30 மணிக்கு அனுப்பி வைச்சிடுங்க என்று சொல்லி கலந்து கொண்டுள்ளார். அவருக்கு பாலா மீது அன்பு இருக்கு என அந்தணன் சுட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement