• Dec 27 2024

கார்த்திக் சுப்புராஜ் உடன் சூர்யா மோதல்? ‘வணங்கான்’ போல் டிராப் ஆகுமா?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் அந்தமான் தீவுகளில் நடந்தது என்பதும் திட்டமிட்ட காலத்தைவிட முன்கூட்டியே படக்குழுவினர் சென்னை திரும்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தான் அந்தமான் படப்பிடிப்பின் போது கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பிதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஊட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதே பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த படம் தொடருமா அல்லது ‘வணங்கான்’ போல டிராப் ஆகுமா என்ற சந்தேகம் படக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இடையே மனக்கசப்பு என்பதெல்லாம் முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் அவ்வப்போது சில மாறுபட்ட உரையாடல்கள் வரும், ஆனால் அப்போதே அதை இருவரும் பேசி தீர்த்து விடுவார்கள் என்றும் படக்குழுவில் இருந்து ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே கௌதம் மேனன், பாலா மற்றும் சுதா கொங்காரா ஆகிய இயக்குனர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சூர்யாவின் படங்கள் அடுத்தடுத்து டிராப்பான நிலையில் ’சூரியன் 44’ படத்திற்கும் அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பது தான் அனைவரின் ஆசையாக உள்ளது.

Advertisement

Advertisement