சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் காமெடி, ஆக்சன், திரில்லர் ஜானர்களில் அமைந்தாலும், சில படங்கள் தந்தை-தாய் மற்றும் குடும்ப உறவுகளுக்கிடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்களில் ஒன்றுதான் “தவமாய் தவமிருந்து”. இதில் தந்தையின் பெருமையை மட்டுமல்லாமல், தாயின் வலியும் அன்பும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான படம் தான் “தவமாய் தவமிருந்து”. இந்த படம் ஐந்து பாடல்களின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த காலத்தில் எந்தவிதமான போலி மேற்பூச்சுகளும் இல்லாமல், ஒரு ஏழை தகப்பனின் வாழ்க்கையை மிக இயல்பாக கண்முன்னே எடுத்துக்காட்டியவர் சேரன்.
படத்துக்கு தொடர்பில்லாத தனி காமெடி, தேவையற்ற காதல் காட்சிகள், சென்டிமென்ட் வசனங்கள் போன்றவற்றை தவிர்த்து, ஒரு தந்தையின் 35 வருட வாழ்க்கையை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார். மகன்களை சிரமப்படாமல் வட்டிக்கு வாங்கி வளர்த்து, அதனால் பட்ட அவமானத்தையும் தாங்கும் தந்தையாக ராஜ்கிரன் நடித்துள்ளார். இந்த படம் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், “தவமாய் தவமிருந்து” படத்தில் தீபாவளி அன்று காசு இல்லாமல் போஸ்டர் ஒட்ட சொல்லும் காட்சி, நிஜமான மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் படமாக்கப்பட்டது. அந்த சூழலை உருவாக்க ஒவ்வொரு முறையும் “ஒன்ஸ் மோர்” கேட்கும் போது மீண்டும் தெருவை அமைத்து தீபாவளி உணர்வை உருவாக்க இயக்குநர் சேரன் பெரும் போராட்டம் செய்தார்.
அந்த காட்சியில் நடித்த போது, ஒரு பக்கம் ராஜ்கிரன் சார் அழுதுகொண்டிருந்தார். மறுபக்கம் நானும் அழுதுகொண்டிருந்தேன். எங்களை நாங்களே மறந்து நடித்த அந்த அனுபவம் ஒரு படம் அல்ல, பல ஏழை அப்பாக்களின் உண்மையான வலி என்று நடிகர் இளவரசன் தெரிவித்துள்ளார்.
Listen News!