• Dec 26 2024

தீப்பந்தத்தை தாங்கி நிற்கும் தளபதி.. வெளியானது விஜய்யின் கடைசி பட அறிவிப்பு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் இளையதளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாக உள்ளது தளபதி 69. கோட் படம் வெளியாகி சில நாட்களே கடந்துள்ள நிலையில் விஜயின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.

தளபதி 69 ஆவது படத்தை கேபிஎன் ப்ரொடக்ஷன் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை எச். வினோத் இயக்குகின்றார். இதற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜய், இந்த படத்தின் மூலமாக சினிமாவுக்கு குட் பாய் சொல்ல உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் காணப்படுகின்றார்கள்.

விஜயின் 30 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்டு இருந்தது. தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில்  போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தார்


இதன் காரணத்தால் விஜயின் கடைசி படம் ஒரு அரசியல் படமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியானது. அதற்கு தகுந்தாற்  போலவே படத்தின் போஸ்டரில் The torch bearer of democracy என கூறப்பட்டுள்ளது. 

மேலும் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த படம் வெளியாக இருப்பதால் கட்சி தொடர்பான வசனம் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement