• Dec 26 2024

ப்ளூ சட்டையை வச்சு செய்த இயக்குநர்.. விஜய் ஆண்டனிக்கு சப்போர்ட்டா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பேமஸ் ஆன திரை விமர்சகராக காணப்படுபவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவர் யாருடைய படமாக இருந்தாலும் பாரபட்சமின்றி பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களை அழித்து வருவார். இவருக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. ஆனாலும் பல சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளார்.

அஜித் நடித்த வலிமை திரைப்படத்திற்கு இவர் கொடுத்த விமர்சனத்தில் அஜித்தை உருவக் கேலி செய்திருந்தார். அத்துடன் விக்ரம் படத்தின் விமர்சனத்தின் போது ஜாஃபரையும் உருவக் கேலி  செய்திருந்தார். இது கடுமையான கண்டனங்களுக்கு முன் வைக்கப்பட்டது.

அண்மையில் தான் விஜய் ஆண்டனியை தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தார். விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியான ரோமியோ படம் பற்றி தாறுமாறாக விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான விஜய் ஆண்டனி, யாருடைய கதைகளையும் கேட்காமல் படத்தை நேரில் சென்று பாருங்கள் என அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் ஆண்டனியை விமர்சிக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டு வந்தார் ப்ளூ சட்டை மாறன்.


இந்த நிலையில், தற்போது விஜய் மில்டன்  இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இது தொடர்பில் பேசிய விஜய் மில்டன், விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் ரொம்ப அழகாக நடித்திருந்தார். ப்ளூ சட்டை போட்டிருந்தா மட்டும் கண்ணு தெரியாதுன்னு தெரியல. விஜய் ஆண்டனி கேரியரில் சின்ன சின்ன எக்ஸ்பிரெஷனை கூட அழகாக வெளிக்காட்டிய படம் ரோமியோ.

அதைவிட பல மடங்கு மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷும் அவரும் ஒரு ரெஸ்டாரண்டில் பேசிக்கொண்டிருக்கும் சீன் நீளமாக உள்ளது. அது அவ்வளவு  அழகாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார் விஜய் மில்டன். இதைப் பார்த்த ரசிகர்கள் போற போக்கில ப்ளூ சட்டையை வைத்து செய்து விட்டாரே விஜய் மில்டன் எனக் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement