• May 08 2025

"மாமன்" படத்தை மனைவிக்கு டெடிகேட் பண்றேன்...! இசை வெளியீட்டில் கண்கள் கலங்கிய இயக்குநர்..!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உணர்வுபூர்வமான கதைகள், குடும்ப உறவுகளின் பின்னணியில் அமைந்த திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. அந்தவகையில் தற்போது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தான் "மாமன்".

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் விமர்சனங்கள் மற்றும் ஆழமான உணர்வுகள் நிறைந்த நிகழ்வாக நடைபெற்றது. விழாவின் முக்கிய தருணங்களில் ஒன்றாக இருந்தது, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் உருக்கமாக அளித்த உரை தான். விழாவில் பேசும் போது கண்களில் கண்ணீருடன் உணர்ச்சி பூர்வமாக பேசிய அவரது வார்த்தைகள் தற்போது இணையதளத்திலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.


"மாமன்" என்பது வெறும் ஒரு பட தலைப்பல்ல. நம்முடைய வீட்டிலேயே காணப்படும் ஒரு உறவின் உணர்ச்சி நிறைந்த பரிமாணம். தமிழ் சினிமாவில் இதுபோன்ற உறவுகளை மையமாக வைத்து வந்த கதைசொல்லல் முறைகள் பல இருந்தாலும், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இந்த படத்தின் மூலம் ஒரு தனித்துவமான பார்வையை கொண்டு வருகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவில் பேசும் போது இயக்குநர் கூறியதாவது, "நான் என் பாமிலியை ரொம்பவே heart பண்ணிட்டேன். அவர்களை ஏமாற்றின மாதிரி ஒரு guilty feeling எனக்குள் இருக்கு. அதனால் தான் இந்தப் படம் அவருக்கு ஒரு மன்னிப்பு போல, ஒரு உணர்வு வெளிப்பாடாக இருக்கட்டும் என்று நினைக்கிறேன்." என்றார்.

Advertisement

Advertisement