இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள படமே பேட் கேர்ள். இதில் முன்னணி நடிகர்களான அஞ்சலி சிவராமன் , ஷாந்தி பிரியா மற்றும் ஹிர்து ஹரூண் ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன் பேட் கேர்ள் படமானது தமிழ் சினிமாவின் புதிய முயற்சி என்றே படக்குழு தெரிவிக்கின்றது.
ஏனெனில் இந்தப் படத்தில் பெண்களின் வாழ்க்கை , சமூக கட்டுப்பாடுகள் மற்றும் ஒருதலைக் காதல் என்பன பற்றி சிறந்த முறையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பேட் கேர்ள் படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை வென்றுள்ளது. இதனை நினைத்து படக்குழு மிகவும் மகிழ்ச்சி அடைந்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
Listen News!