• Dec 26 2024

பிக்பாஸ் வீட்டிற்கு விழுந்த செருப்படி! பிக் பாஸ் வரலாற்றில் இப்படியொரு சம்பவமா? எல்லா புகழும் ஆண்டவருக்கே...! வைரலாகும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இது தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கில் அவர்கள் தோற்றால் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் போட்டியாளர்களுள் ஒருவரான பூர்ணிமா ரவி, தொகுப்பாளரும், நடிகருமான கமலஹாசனையே குடிகார அங்கிள் என கூறி பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தார். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. 

மேலும், இறுதியாக கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், பூர்ணிமாவிடம் கமலஹாசன் கேள்வி எழுப்ப, அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அத்துடன், அர்ச்சனாவை பலர் கைதட்டி வரவேற்றது தான் அவரது குமுறலுக்கும் காரணமாகவும் இருந்தது.


அதுமட்டுமின்றி, மாயாவும் பூர்ணிமாவும் பிக் பாஸ் வீட்டில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

இந்த நிலையில், தற்போது அவர்கள் பிக் பாஸை கூட விட்டு வைக்கவில்லை. அதன்படி, பிக் பாஸ் 7 நிகழ்ச்சி எனக்கு இப்போ போர் அடிக்குது என கூறிய பூர்ணிமா, தனது செருப்பை எடுத்து பிக் பாஸ் சுவருக்கு மேல் தூக்கி எரிந்து விளையாடியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டிலுள்ள ஏனைய போட்டியாளர்கள் சிலர் கூறியும், அவற்றை கேட்காமல் செருப்பை தூக்கி மீண்டும் வீசுகிறார். இவ்வாறு இவர்களுக்கு ஒரு என்ட் இல்லையா என பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்களும் கடுப்பில் உள்ளனர். தற்போது, குறித்த காணொளியும் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement