• Dec 26 2024

ஸ்ரீ லங்காவுக்கு திடீர் விசிட் அடித்த மாஸ் ஹீரோ.. ஏன் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்த சதீஷ், தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இவர் ‘கொலை கொலையா முந்திரிக்கா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

தன்னுடைய அறிமுகப் படத்திலேயே தனது இயல்பான நடிப்பினாலும், நகைச்சுவைப் பாணியினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்து விட்டார். இதனால் தொடர்ந்தும் பல படவாய்ப்புகள் இவருக்கு வந்து குவியத் தொடங்கின.


அந்தவகையில் 'மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு காமெடி நடிகராக பல படங்களில் நடித்த சதீஷ்,  முதல்முறையாக ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதை தொடர்ந்து ’ஓ மை கோஸ்ட்’, ’காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.


இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு சென்றுள்ளார் நடிகர் சதீஷ். இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வணக்கம், ஆயுபோவன் ஸ்ரீலங்கா என டேக் செய்துள்ளார்.

ஆனாலும், இவர் அடுத்த படப்பிடிப்பிற்காக வந்துள்ளாரா? இல்லை இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளாரா? என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

ஆனாலும் அவரது அசுர வளர்ச்சியை பார்த்து அவர் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  

Advertisement

Advertisement