• Dec 28 2024

30 நாட்களில் முடித்தேன்.. எனது வேலை ரொம்ப கிளீன் ஆனது..!! தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இசைஞானி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு கர்வத்தோடு தனிக்காட்டு ராஜாவாக திகழ்பவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இளையராஜாவின் வாரிசுகளும் அவரை போலவே இசையிலும் பாட்டிலும் பிரபலமாக காணப்பட்டார்கள். இளையராஜாவின் ஒரே ஒரு மகள் பவதாரணி அண்மையில் தான் உயிரிழந்தார். இந்த சோகம் அவர்களின் குடும்பத்தில் மிகப்பெரிய அடியாக காணப்பட்டது.

இந்த நிலையில், இசைஞானி இளையராஜா சற்றுமுன் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை பற்றி தினமும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகின்றன. ஆனாலும் அவற்றையெல்லாம் பார்ப்பதற்கு எனக்கு நேரம் இல்லை என தெரிவித்துள்ளார்


மேலும் அவர் கூறுகையில், மத்தவங்களை கவனிப்பது என் வேலை இல்லை. என்னைக் கவனிப்பதும் என் வேலையை சரியாக செய்வதுமே என் வேலை. கடந்த 30 நாட்களில் ஒரு சிம்பதியை எழுதி முடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ,


Advertisement

Advertisement