• Dec 26 2024

கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டிருக்கும் அடுத்த பட்டம் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையிசை கவிஞர்களில் திரைத்துறை தாண்டி இலக்கியபரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் மூத்த கவிஞர் தான் வைரமுத்து.கவிஞ்சர் எழுத்தாளர் என இலக்கிய இயங்குவெளியில் முன்னிடம் பிடிக்கும் வைரமுத்துவின் திரையிசை பாடல்களில் கூட நாம் இலக்கிய சுவையை காணக்கூடியதாய் உள்ளது.

In what way are you going to inspire a fearful minority? - Poet Vairamuthu  | அச்சப்படும் சிறுபான்மைக்கு எந்த வழியில் நம்பிக்கை ஊட்டப்போகிறீர்கள்? -  கவிஞர் வைரமுத்து ...

இளையராஜாவின் இசையில் 'பொன்மாலைப் பொழுது' பாடலை எழுதி தமிழ் திரையுலகில் காலடி வைத்த கவிஞர் இதுவரை 6000 திரையிசை பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.இவரது கவித்திறனை பெருமை படுத்தும் விதமாக இவருக்கு கவிப்பேரரசு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


அண்மையில் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கும் கவிஞர் மேலும் "இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொள்வேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார். 



Advertisement

Advertisement