• Jan 12 2025

விரைவில் நடக்கவிருக்கும் விஜய் டெலி அவார்ட்ஸ்.. வெளியானது தேதி விபரம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் வகையில் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என்பவற்றை தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

இதில் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்களும் இளைஞர்களை கவர்ந்த தொடர்களும் காணப்படுகின்றன. அவை டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகிக்கின்றன.

அந்த வகையில் பிக் பாஸ், சூப்பர் சிங்கர், சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, ஸ்டார் மியூசிக் என இதில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல்களாகவும் ஷோவாகவும் காணப்படுகின்றது.

சின்னத்திலேயே கலக்கும் கலைஞர்களுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தால் தான் அவர்களுக்கும் ஒரு ஆர்வம் வரும்.

இந்த நிலையில் சின்னத்திரை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விஜய் டிவியில் விரைவில் விஜய் டெலி அவார்ட்ஸ் விருது விழா நடக்க உள்ளது.

அதன்படி எதிர்வரும் 11-ம் தேதி ஒன்பதாவது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள் நடக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement