• Dec 26 2024

நடிகர் விஜய் ஆலோசனையின் கீழ் நடைபெறும் சிறப்பு மருத்துவமுகாம்கள்... புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் ரசிகர்கள் செய்யும் செயல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் ஆலோசனையின் கீழ் மக்கள் நலனுக்காக புதியதொரு திட்டம் ரசிகர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.


மிக்ஜாம் புயலால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு வகையிலும் அரசினராலும் , பிரபலங்களினாலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றனர். 


விஜய் மக்கள் கட்சி தலைவர் புஷி ஆனந்த் அவர்களில் தலைமையின் கீழ் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது நடிகர் விஜய் அவர்களின் ஆலோசனையின் கீழ் கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்ற தொனிப்பொருளில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை-க்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் டிசம்பர் 14-ம் தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்புமருத்துவமுகாம்கள் நடைபெறுகிறது.

 

Advertisement

Advertisement