• Dec 26 2024

விஜயா மாஸ்டருக்கு வைக்கப்பட்ட ஆப்பு.. தனது முடிவில் விடாப்பிடியாக நின்ற முத்து?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயாவின் வகுப்பிற்கு ஆறு பேர் புதிதாக வந்து சேர்ந்துள்ளார்கள். அதில் ஒரு காதல் ஜோடியும் காணப்படுகின்றது. வெளியே எங்கேயும் கதைத்தால் மாட்டி விடுவோம் என்று விஜயாவின் கிளாசில் சேர்ந்து பரதநாட்டியத்தோடு  காதலும் பண்ணுகிறார்கள்.

மறுபக்கம் க்ரிஷை தத்தெடுப்பது பற்றி முத்து பேச, சாமியே வேண்டாம் என உத்தரவு கொடுத்து விட்டார் அதனால கொஞ்ச நாள் பொறுத்து இருப்போம் என்று மீனா சொல்லவும் இல்லை என்று எல்லாரிடமும் பேச போவதாக முத்து சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து ரெஸ்டாரண்டில் ஸ்ருதியுடன் ரவி கோவப்பட்டதால் அவரை அழைத்துக்கொண்டு டினருக்கு போகலாம் என்று ஸ்ருதியை ரவி கூட்டிச் செல்லுகின்றார். 


இதையடுத்து பரதநாட்டிய வகுப்பில் குறித்த மாணவன் விஜயாவுக்கு மாஸ்டர் என ஐஸ் வைத்ததோடு மட்டுமில்லாமல் தான் உங்களை வீட்டில் கொண்டு போய் இறக்குவதாக விஜயா  வீடு வரை வந்து அங்கு உள்ளே சென்று விஜயாவின் ஹேண்ட் பேக்கை வைத்துவிட்டு செல்கின்றார்.

இதைப் பார்த்த முத்து ரொம்பவும் வலியுரானே என்று சொல்லவும் தனது மாணவனை அப்படி சொல்ல வேண்டாம் என்று விஜயா  சொல்லுகின்றார். அதன் பின்பு எல்லாரும் வீட்டிற்கு வந்ததும் க்ரிஷ் பற்றிய விசயத்தை முத்துவும் மீனாவும் தொடங்குகின்றார்கள். இதன் போது ரோகிணி வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement