• Dec 26 2024

2 வருஷமா ஹோட்டலில் ஓசியில் சாப்பிட்ட பச்சன் வாரிசு! ஹீரோன்னா இப்படியா செய்வது!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அமிதாப் பச்சன்  குடும்பத்தினை சேந்தவர் வாரிசு நடிகரான அகஸ்தியா நந்தா. இவர் தற்போது சினிமா திரை துறைக்கு வாரிசு நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரில் படித்தவர் அகஸ்தியா.


அங்கு படித்தபோது அகஸ்தியா செய்த காரியம் பற்றி கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் கூறியதாவது.  நியூயார்க்கில் படித்தபோது தான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த இந்திய உணவகத்திற்கு அடிக்கடி சென்று சாப்பிட்டிருக்கிறார் என் பேரன் அகஸ்தியா.


அந்த உணவகத்தில் ஒரு உணவு வகையின் பெயர் அமிதாப் பச்சன். அது என்ன சாப்பாடு என கேட்டு விபரம் அறிந்திருக்கிறார் அகஸ்தியா. சாப்பிட்டு முடித்த பிறகு அந்த அமிதாப் பச்சன் என் தாத்தா தான் என ஹோட்டல் உரிமையாளரிடம் கூறியிருக்கிறார்.


அவர்கள் முதலில் நம்பவில்லை. உடனே தன் செல்போனில் இருந்த என் புகைப்படத்தை காண்பித்திருக்கிறார். இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக அந்த உணவகத்தில் இலவசமாக சாப்பிட்டிருக்கிறார் என் பேரன் என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement