• Apr 07 2026

சைந்தவி - ஜி.வி. பிரகாஷ் இடையேயான இப்போதைய உறவு இதுதான்.! லீக்கான தகவல்கள்..

shali / 6 days ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் G. V. பிரகாஷ் குமார் சமீபத்தில் தனது முன்னாள் மனைவி சைந்தவி குறித்து பகிர்ந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் கூறியதாவது, “சைந்தவி என் கிளாஸ் மேட் மட்டுமல்ல, எனக்கு ஒரு நல்ல நண்பர். நாங்கள் திருமண உறவை பகிர்ந்து கொண்டோம். பின்னர் சில காரணங்களால் பிரிந்து விட்டோம். ஆனால் அந்த பிரிவு எங்கள் நட்பை பாதிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், “இப்போது கூட நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம், என்றும் அப்படியே இருப்போம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, மரியாதை கொடுத்து வாழ்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும், ஒருவரின் இடத்தை மற்றொருவர் மதிக்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, தங்களின் குழந்தையை இருவரும் சேர்ந்து வளர்ப்பது குறித்து அவர் பெருமையாக பேசியுள்ளார். “நாங்கள் இருவரும் மிகவும் ப்ரொபஷனலாக அணுகுகிறோம். குழந்தையின் நலனே எங்களுக்கு முதன்மை. அதற்காக எப்போதும் இணைந்து செயல்படுகிறோம்.” என்றார்.

இந்த கருத்துகள், பிரிவுக்குப் பிறகும் நல்ல உறவை பராமரிக்க முடியும் என்பதற்கான ஒரு நல்ல உதாரணமாக ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

Advertisement

Advertisement