• May 09 2025

"நான் இந்த அளவிற்கு உயர்வதற்கு காரணம் இதுதான்.." நடிகர் சூரி பேச்சு..

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பரோட்டா சூரியாக சூப்பர் காமெடி நடிகராக வலம் வந்த இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து கருடன் படத்திலும் நடித்தார்.


தற்போது படவா ,ஏழு கடல் ஏழுமலை போன்ற  படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் மாமன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப் படம் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் தனது பழைய படங்கள் குறித்து பேசியுள்ளார்.


அதில் சூரி  " சீம ராஜா படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள சொன்னார். இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன், என் மனைவியும் எனக்கு உதவி செய்தார். படம் வெளியான பின் திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் வெறும் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது. அதை கண்டு சற்று கவலை கொண்டேன். ஆனால், அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement