• Apr 21 2025

"இதற்காக தான் KPY பாலா சமூக சேவை செய்கின்றார்..!" நடிகர் அமுதவாணன் பேட்டி..

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

இன்றைய காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் வாழும் மக்கள் சிறந்த மனிதர்கள் என அனைவரும் நம்புகின்றனர். தனது தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து தன் சேமிப்பில் இருந்து பிறருக்கு உதவுவது மிகப்பெரிய காரியம் இந்த நிலையில் KPY நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகருமான பாலா தனக்கு கிடைக்கும் வருமானத்தை ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுத்து வருகின்றார். ஆனால் சிலர் இவரது உதவிகளை விளம்பரத்திற்காக செய்கிறார் என கூறி வருகின்றனர்.


இது குறித்து தற்போது நடிகர் அமுதவாணன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். "பாலா இப்போது மட்டுமல்ல எப்போதும் என்னுடன் தான் இருக்கிறார். மற்றவர்கள் செய்ய தயங்கும் போது ஒருவன் உதவி செய்வதை கிண்டல் செய்வது சரியாக இருக்காது. அவன் செய்யும் உதவிகளை விளம்பரத்திற்காக செய்கிறான் என ஏன் சொல்ல வேண்டும். அரசியல்வாதி, முதல்வர் அல்லது எம்எல்ஏக்கள் விளம்பரத்திற்காக கூட தனது பணத்தை கொடுத்து உதவினால் என்ன அதுவும் காசு தானே" என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement